பொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள்

பொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள். கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும்

வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.