விபச்சாரம் சட்டவிரோதம் இல்லை'... தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்..

சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வது சட்ட விரோதம் இல்லை. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என திருச்சியில் பாலியல் தொழிலாளர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் பாலியல் தொழில் என்பது சட்ட விரோதமாக கருத்தபட்டு வருகிறது. இருப்பினும் தங்களது சுய விருப்பத்துடன் அத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவதூறாகவும் நடத்தப்டுகிறார்கள் என்பதான குற்றசாட்டுகள் எழுகின்றன. இந்த நிலையில் திருச்சியில் பாலியல் தொழிலாளிகள் தங்களது கோரிக்கைகளை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.