இந்தியாவில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது அல்ல. இந்தியாவில், 10 லட்சம் பேர் பாலியல் தொழில் செய்கின்றனர்

பணியிடத்தில் பாதுகாப்பின்மை மற்றும் நிறைவான வருமானம் இல்லாததே பாலியல் தொழிலுக்கான முக்கிய காரணிகள். இந்திய அரசியல் சாசனத்தின், 21ம் விதிப்படி, உச்சநீதிமன்றம் பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமையை நிலை நாட்டுகிறது.

எனவே பாலியல் தொழிலாளர் மீதான வன்முறை, பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும். சோதனையின் போது பிடிபட்ட பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிடக் கூடாது. சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வோரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யக்கூடாது" என வலியுறுத்தினார்.