<no title>

இந்த குடியிருப்புக்கு அருகே துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் மாடி வீடு ஒன்று உள்ளது. அதற்கு அருகே அந்த வீட்டின் சுற்றுச் சுவர் 10 அடி உயரத்தில் கட்டபட்டிருந்தது. நேற்று இரவு பெய்த கன மழையால் இன்று காலை 5 மணிக்கு அந்த சுற்று சுவர் இடிந்து இந்த நான்கு வீடுகளின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் நசுங்கியும், மண் மூடியும் உயிரிழந்தனர்.







இதனையடுத்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து ஜே.சி.பி உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்து விபத்து 15 பேர் பலி!

துணிக்கடை உரிமையாளரின் வீட்டிற்கான சுற்றுச்சுவர் அடியில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதால் தங்கள் வீட்டிற்கு பாதிப்பு என நான்கு வீட்டுக்காரர்கள் தொடர்ந்து புகார் அளித்தும் துணிக்கடைக்காரரோ, அதிகாரிகளோ காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதன்விளைவாகவே இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு புறம் உள்ள சுற்றுச் சுவரை இடிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: திமுக ரியாக்‌ஷன் என்ன?

இந்த விபத்தில் உயிரிழந்த 4 குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு நாளை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையம் சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார்.



 

Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
 

 

 

 





மேலும் படிக்க : தமிழ்நாடு






 


 

Web Title tamil nadu government announced relief fund for mettupalayam wall fall down accident

(Tamil News from Samayam Tamil , TIL Network)



 





 

 

 

 

 


 

 

 

 

 

 



உங்கள் கருத்தை பதிவு செய்ய


 


 




 

 









 


 


 

 


வீடியோ


 





 








 

உங்களுக்கான சிறப்பு செய்திகள்





மூன்று மாவட்டங்களுக்கு கனமழை: எந்த ஊருக்கெல்லாம் தெரியுமா?








MProfit | Portfolio management software for Indian investors


MPROFIT








MBA in Hospital & Health Systems Management


BITS PILANI








எனக்கு அரசியலுக்கு வரும் ஆசையே கிடையாது: பிரதமர் மோடி








உங்க சாப்பாடு சுத்தமா இருக்கா? ஆய்வில் திடுக்கிடும் தகவல்!








செய்திகள்