ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான, அரசு அமைந்த பிறகு, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


அடித்தட்டு மக்களும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு அங்கமாக ஆதி திராவிடர் நலனுக்கான திட்டங்கள் பார்க்கப்படுகிறது.




 


ஆதி திராவிடர்களுக்காக, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த ஒரு பார்வை இதோ:


2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.


மேலும், ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்காக 19 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 விடுதிக் கட்டடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகளுக்கான 9 கூடுதல் பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.