சிங்கப்பூர்: ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் (2020) வெறும் 7 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் 6.1 சதவிகிதமாக மட்டும் இருக்கும் என்றும் கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வெகுவாக குறைந்தாலும், 2020ம் நிதியாண்டில் இது நிச்சயம் சற்று மேம்படும் என்றும், இதற்கு மத்திய அரசின் கார்ப்பரேட் வரி குறைப்பு சலுகை மற்றும் மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை கை கொடுக்கலாம் என்றும் இந்த நிதியம் கணித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு
சப்போர்ட் மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வரி விகித குறைப்பு என தீவிர நடவடிக்கைகள் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்றும், நலிவடைந்துள்ள பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக இருக்கும். அதிலும் சமீபத்திய வரி குறைப்புகள், நிதித்துறையில் நீடித்து வரும் பலவீனங்களை பூர்த்தி செய்வதில் அரசின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி துறைகளை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துணை இயக்குனர் ஜெனாதன் ஓஸ்ட்ரி கூறியுள்ளார்.