சிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்

சென்னை: "நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்போம்.. கடைகளை நோட்டமிடுவோம்.. ஒரு மாசத்துக்கு அப்பறம் சிசிடிவி பதிவு எல்லாம் தானா அழிஞ்சிடும் தெரியுமா" என்று போலீசாரையே திகைத்து வைத்து கொண்டிருக்கிறார்கள் கொள்ளையன் முருகனும், சுரேஷூம்! லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரத்தில், நாட்கள் கடந்து கொண்டே இருந்த நிலையில், மூளையாக இருந்த முருகனையும், உடன் செயல்பட்ட சுரேஷையும் போலீசார் பிடிக்கவே முடியவில்லை. ஆனால், சுரேஷின் அம்மா, தம்பி என குடும்பத்தாரை விசாரணை வளையத்துக்குள் நம் போலீசார் கொண்டு வருவார்கள் என்று முருகனும், சுரேஷும் எதிர்பார்க்கவே இல்லை

சரண் அதனால்தான் முருகன் பெங்களூர் கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை தினமும் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படி சுரேஷிடம் வெளிவந்த கூடுதல் தகவல்கள்தான் இவை